• May 06 2024

குட்டை சோட்சில் ரசிகர்களை குஷிப்படுத்திய நடிகை பூஜா ஹெக்டே-என்ன ஒரு போஸ்...இதோ புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் மிகவும் பிரபல்யமான பெண் நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜீவா நடிப்பிலும், மிஸ்கின் இயக்கத்திலும் வெளியான 'முகமூடி' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார்.


அதனைத் தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் பெரிதும் இல்லாத காரணத்தினால் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகத்தில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். எதிர்பார்த்தது போன்றே அதில் வெற்றியடைந்த நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்து.


இதன் பின்னர் விஜய்யுடன் இணைந்து 'பீஸ்ட்' படத்தில் நடித்து மறுபடியும் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார். இப்படமானது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை. இதனால் மறுபடியும் மற்ற மொழி படங்களில் தன்னுடைய கவனம் செலுத்தி வருகிறார்.

அதுமட்டுமன்றி 'பீஸ்ட்' படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்திலும் பூஜா ஹெக்டே கமிட்டாகியுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் சினிமா வட்டாரங்களிலிருந்து ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது.


இவ்வாறு இருக்கையில் குட்டை சோட்சுடன் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் அதற்கு லைக்ஸ்களை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement