• May 04 2024

நடிகை நித்யா மேனனுக்குத் திருமணம்... மாப்பிள்ளை இந்த நடிகர் தானாம்... குவியும் வாழ்த்துக்கள்..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகை நித்யா மேனன். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தான் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பின்னர் இவர் 2011-ஆம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் வெளியான 180 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். 


இதனையடுத்து மேலும் ஒரு சில படங்களில் நடித்து வந்த இவருக்கு தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படம் பேரையும் புகழையும் தேடிக் கொடுத்தது. அப்படத்தின் உடைய வெற்றிக்கு பின் நித்யாமேனனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. அந்தவகையில் தமிழில் தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.


இந்த நிலையில் நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதாவது இவர் தனது பள்ளிப்பருவ நண்பரும், தற்போது மலையாள படங்களில் நடித்து வருபவருமான நடிகர் ஒருவரைத்தான் கல்யாணம் பண்ண இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் இதுகுறித்து இன்னமும் நடிகை நித்யா மேனன் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எது எவ்வாறாயினும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement