இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் சந்திரமுகி 2. இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத், மைசூர் உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்டமான அரண்மனைகளிலும் அரண்மனை செட் அமைக்கப்பட்டும் எடுக்கப்பட்டது. படம் ரிலீஸாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ள இந்தப் படத்திற்கு ஆஸ்கர் நாயகன் எம்எம் கீரவாணி இசையமைத்துள்ளார். அவரது இசையில் படத்தின் இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து லிரிக் வீடியோ பாடல்களாக வெளியாகியுள்ளன. ஆக்ஷன், காமெடி, சென்டிமெண்ட், அச்சம் என பல்வேறு சுவைகளை படத்தின் முதல் பாகம் கொடுத்த நிலையில், ரஜினியின் ரோலில் ராகவா லாரன்ஸ் எப்படி நடித்திருப்பார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு நாளைய தினம் சென்னையில் நடைபெறவுள்ளது.இதனை ராகவா லாரன்ஸ் தற்பொழுது உறுதிப்படுத்தியுள்ளார். நாளைய தினம் நடைபெறவுள்ள இசை வெளியீட்டிற்கு ரசிகர்களின் ஆசிர்வாதங்கள் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் படத்தில் அவரும் கங்கனாவும் இணைந்துள்ள புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!