• Sep 26 2023

பெண்களுக்காக புதிய தொழிலை ஆரம்பித்துள்ள நடிகை நீலிமா ராணி- அப்போ இனிமேல் நடிக்க வரமாட்டாரா?

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்தரிரமாக அறிமுகமாகியவர் தான் நீலிமா ராணி. இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கின்றார்.


குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நீலிமா ராணி நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம், மொழி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அத்தோடு சமீபத்தில் வெளியான ஆகஸ்ட் 16, 1947 எனும் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் அம்மாவாக நடித்திருப்பார்.

2008ம் ஆண்டு நீலிமா ராணி 10 வருட வயது வித்தியாசம் கொண்ட இசைவாணனை திருமணம் செய்திருக்கிறார்.இவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் உண்டு. இவர் சென்னையில் உள்ள ஆர். கே. சாலையில் 'நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்' எனும் அழகு நிலையத்தை புதிதாக தொடங்கியிருக்கிறார்.


 இந்த அழகு நிலையத்தை எஸ் பி சரண் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது தொழிலதிபர்கள் இளங்கோவன், வீணா குமரவேல் மற்றும் சி. கே. குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு, நடிகை நீலிமா இசை மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களின் மூலமும் பலரும் வாழ்த்து் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement