• Apr 28 2024

செம ஹான்சம் லுக்கில் இருக்கும் நடிகர் vijay- காஷ்மீர் ஷுட்டிங்கின் போது எடுத்த ட்ரெண்டிங் போட்டோ

stella / 7 months ago

Advertisement

Listen News!


விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தான் முடிவடைந்தது.அத்தோடு படத்தின் போஸ்ட் புரெடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதனாலேயே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.


வருகிற அக்டோபர் மாதம் வெளிவரவிருக்கும் இப்படம் குறித்து ஒவ்வொரு நாளும் ஒரு அப்டேட் வெளியாகிக்கொண்டே தான் இருக்கிறது. மேலும் இதன் இரண்டாவது சிங்கிள் விரைவில் வெளியாகும் என அனிரூத் அண்மையில் தெரிவித்திருந்தார்.அத்தோடு இசை வெளியீட்டு விழா இந்த மாதம் நடைபெறும் என்று நம்பப்படுகின்றது.


இந்த நிலையில் விஜய்யின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் ஒன்று வைரலாகி வருகின்றது.இப்புகைப்படம் விஜய் காஷ்மீரில் எடுத்த புகைப்படம் ஆகும். இதனைப் பார்த்த ரசிகர்கள்  விஜய் செம ஹான்சமாக இருக்கின்றாரே எனக் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement