• Sep 26 2023

விஜய்யின் மகனது ஆசையை நிறைவேற்ற மறுத்த லைகா நிறுவனம்- கறாராக முடியாது என்று சொன்னதற்கு இது தான் காரணமா?

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் விஜய். இவரது நடிப்பில் லியோ என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீஸாகவுள்ளது.இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.இவருடைய மகன் தான் ஜேசன் சஞ்சய்.

இவர் அண்மையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக அண்மையில் அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியாகியிருந்தது.இந்த நிலையில் இப்படத்திற்கு இசையமைக்க இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் மகனான ஏ.ஆர். அமீனை கேட்கலாம் என்று முடிவு பண்ணியிருந்தாராம்.


 பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானை பயன்படுத்திய லைகா நிறுவனம் சந்திரமுகி 2 படத்துக்கு மரகதமணியையும் இந்தியன் 2 படத்திற்கு அனிருத்தையும் பயன்படுத்தி வருகின்றனர். ரஜினிகாந்தின் லால் சலாம் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ஆனால், அவரது மகனை இசையமைப்பாளராக கொண்டு வரும் எண்ணம் லைகாவுக்கு பெரிதாக இல்லை என்கின்றனர்.

அப்பா விஜய்க்கு தொடர்ந்து ஹிட் பாடல்களையும் மாஸ் பிஜிஎம்மையும் போட்டு ஹிட் கொடுத்து வரும் அனிரூத்தை உங்க படத்துக்கு மியூசிக் பண்ண கேட்கலாம் என்றும் அமீன் இன்னும் வளர்ந்து வரட்டும் அதன் பின்னர் பார்க்கலாம். ஒரே நேரத்தில் இரண்டு ரிஸ்க்கை எடுக்க சொல்லாதீங்க இது பிசினஸ் என கறாராக லைகா தரப்பு சொல்லியிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.


 இதனால் தனது நண்பனை தன்னுடனே சினிமாவில் அறிமுகப்படுத்த முடியவில்லையே என்கிற வருத்தம் லேசாக ஜேசன் சஞ்சய்க்கு இருந்தாலும் காசு போடும் தயாரிப்பாளர்களின் கட்டளைக்கு கீழ் பணிந்து ஓகே சொல்லி விட்டார் என்கின்றனர். கூடிய விரைவிலேயே சஞ்சய் தத் ஸ்க்ரிப்ட் வொர்க் மற்றும் நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட விஷயங்களை அறிவிப்பார் என்று நம்பப்படுகின்றது.


Advertisement

Advertisement

Advertisement