• Sep 21 2024

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்டை திரைப்படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் நடிகை மாளவிகா மோகனன். முதல் படமே சூப்பர் ஸ்டாருடன் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்தார்.

தொடர்ந்து மாளவிகா மோகன் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்

தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் மாளவிகா. இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலிலும் அள்ளி குவித்தது.இதன் மூலம் நடிகை மாளவிகா மோகன் பிரபலமானார்.

தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாறன் திரைப்படத்தில் நடித்திருந்தார். படம் தோல்வியாக அமைந்தது. இதையடுத்து அவருக்கு தமிழ் படங்கள் அவ்வளவு வாய்ப்புகள் குறைந்து வந்தன.

இருப்பினும்,சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மாளவிகா அடிக்கடி போட்டோ ஷூட் செய்து தனது வலைத்தளத்தில் புகைப்படங்களை ஷேர் செய்து வருவர். இவருடைய புகைப்படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது

இந்நிலையில் இப்போது மாளவிகா மோகன் பிரபல ராப் இசைக் கலைஞரான பாட்ஷாவோடு இணைந்து ‘TAUBA’ இசை ஆல்பத்தில் நடித்துள்ளார் இது மாளவிகா நடிக்கும் முதல் இசை ஆல்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement