• Jul 04 2024

நடிகை காஜல் அகர்வாலா இது…புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால்.கடந்த 2008 -ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான பழனி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு நடிகரான ராம்சரணுடன் இணைந்து மகதீரா என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் இவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்று கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தமிழில் விஜய் விஷால் தனுஷ் ஜெயம் ரவி சூர்யா கார்த்தி என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கிலும் மகேஷ்பாபு ராம்சரண் நானி எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

இந்த நிலையில் இவர் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கௌதம் கிச்சிலு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது ஹனிமூன் புகைப்படங்களும், ரொமாண்டிக் புகைப்படங்களும் அவ்வப்போவது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தன.

காஜல் அகர்வால் கர்ப்பகால போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு நீல் என பெயர் வைத்திருந்தனர். ரசிகர்கள் பலரும் காஜல் அகர்வாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பிரசவத்திற்கு பின் பல நாட்கள் கழித்து தனது மகனுடைய புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது நடிகை காஜல் அகர்வாலின் சமீபத்திய புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதில் சற்று உடல் எடை கூடி ஆளே மாறியுள்ளதுபோல் தெரிகிறார் காஜல்.

இதோ அந்த புகைப்படம்..

Advertisement

Advertisement