• May 04 2024

குடும்பத்துடன் கோவாவில் விடுமுறையைக் கொண்டாடி வரும் நடிகை காஜல் அகர்வால்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2004ல் ஹோ கயா நா என்ற பாலிவுட் படத்தில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்.இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் 2007ல் லட்சுமி கல்யாணம் என்ற படத்தில் என்ட்ரி கொடுத்தார்.அதன் பின்னர் தமிழில் பரத் நடிப்பில் வெளியான பழனி என்னும் படத்தில் அறிமுகமானார்.

இப்படத்தினைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என தன்னை பிசியாக்கிக் கொண்ட காஜல் அகர்வாலுக்கு ராம்சரணுடன் நடித்த மகதீரா திரைப்படம் சிறந்த நடிகையாக அறிமுகப்படுத்தியது. இதனால் தமிழில் விஜய் விஷால் தனுஷ் ஜெயம் ரவி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

இதையடுத்து கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீல் என்ற ஆண்குழந்தை பிறந்துள்ளது.

தொடர்ந்து தன்னுடைய ஹனிமூன், கர்ப்பகால புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திவந்த காஜல் அகர்வால் தற்போது தன்னுடைய குழந்தையின் முதல் விடுமுறை கொண்டாட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். தற்போது கோவாவில் குடும்பத்தினருடன் விடுமுறையில் உள்ளார்.

தொடர்ந்து தன்னுடைய கணவர் கிச்சுலுவிற்கு முத்தமழை பொழிகிறார் காஜல் அகர்வால். பீச்சில் தனியாக இருவரும் நடைபயணம் செய்கிறார்கள். தன்னுடைய குழந்தையை கடலலையில் நனைக்கிறார். இவ்வாறு செல்கிறது அந்த வீடியோ. தன்னுடைய விடுமுறையை சிறப்பாக கொண்டாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement