• May 18 2024

நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் அமீர்கான் நடிக்கும் படம்…வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நடிகர்….யார் தெரியுமா?…!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பாலிவுட் பிரபலங்களில் ஒருவரே நடிகர் அமீர் கான். இவர் 1973 களில் சினிமாவில் காலடி எடுத்து வைத்த காலம் முதல் இன்றுவரை ஏராளமான படங்களில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் இவர் தற்போது 'லால் சிங் சத்தா' என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தினுடைய படப்பிடிப்புகள் யாவும் முடிவடைந்த நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றன. அத்தோடு இப்படம் ஆகஸ்ட் 11-ஆம் திகதி வெளியிடப்படும் எனவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமீர்கான் நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் மறுபடியும் இப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்திருப்பதனால் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு எதிர்பார்ப்புக்கள் நிலவி வருகின்றன.

இந்த நிலையில் இப்படம் தொடர்பான புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கின்றது. அதாவது இப்படத்தினுடைய வெளியீட்டு உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கின்றது. அதுமட்டுமல்லாது இந்த நிறுவனம் அதே நாளில் 'கோப்ரா' படத்தையும் வெளியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement