• May 18 2024

சூர்யா-சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படம்…கதாநாயகியாகும் பிக்பாஸ் பிரபலம்…எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக கொடி கட்டிப் பறந்து வருபவர் நடிகர் சூர்யா. இவரின் கட்டான உடலமைப்பிற்கும், அழகிற்கும், நடிப்பிற்கும், கம்பீரமான பேச்சிற்கும் என்றே இவருக்கு பெரியளவிலான ரசிகர் பட்டாளமே உண்டு. அத்தோடு மக்கள் மனங்களைக் கவரக்கூடிய வகையில் வெவ்வேறுபட்ட கதையம்சங்களைக் கொண்ட படங்களைத் தேர்ந்திடுத்து நடிக்கக்கூடிய திறமையும் இவருக்கு உண்டு.

இவ்வாறாக படங்களின் மூலமாக தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகின்ற சூர்யாவிற்கு 'சிறுத்தை' படத்தை இயக்கிய இயக்குநர் சிவாவுடன் இணைவதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. எனினும் அந்த சமயத்தில் இயக்குநர் சிவாவுக்கு நடிகர் அஜித்தை இயக்கும் வாய்ப்பு அமைந்திருந்தமையால் அந்தப் படம் பின்னுக்கு தள்ளிப் போனது. இவ்வாறாக சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக சிவா-சூர்யா கூட்டணி இணைவதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.

இதனை அடுத்து நடிகர் சூர்யா இயக்குநர் பாலாவின் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்காகச் சென்று விட்டார். அதனைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் 'வாடிவாசல்' என்ற படமும் தொடங்க உள்ளது. இந்த நிலையில் சிவா-சூர்யா கூட்டணியில் உருவாக்கவுள்ள படம் எப்போது தொடங்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனினும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்க இருந்த இப்படத்தினை தற்போது தில் ராஜு தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாது இன்னொரு கருத்தாக தில் ராஜு பைனான்ஸ் மட்டுமே செய்வதாகவும் கூறப்படுகின்றது. இதில் எது உண்மை என்று தெரியவில்லை.

இந்தநிலையில் இது தொடர்பான மற்றுமொரு செய்தியும் வெளியாகி இருக்கின்றது. அதாவது இந்தப் படத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நடிகையான மஹிரா ஷர்மா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. மேலும் இவர் ஹிந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 13 இல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர் ஒருவரும் இப்படத்தில் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்புக்கு கிளம்பியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement