• Jan 19 2025

நான் வீட்லயும் குடிப்பேன், ரோட்லயும் குடிப்பேன்.. நடுரோட்டில் தகராறு செய்த காமெடி நடிகர்..

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

காமெடி நடிகர் ஒருவர் பட்டப்பகலில் நடுரோட்டில் மது அருந்தியதோடு நான் வீட்டிலும் குடிப்பேன், ரோட்லயும் குடிப்பேன் என பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்தவர் நடிகர் கார்த்திக் சீனிவாசன். விஜய் நடித்த ’நண்பன்’ திரைப்படத்தில் இலியானாவை திருமணம் செய்ய இருக்கும் கேரக்டரில் நடித்திருப்பார் என்பதும் அது மட்டும் இன்றி ’இன்று நேற்று நாளை’ என்ற படத்தில் விஞ்ஞானியாக நடித்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் கார்த்திக் சீனிவாசன் மற்றும் காமெடி நடிகர் சாம்ஸ் ஆகிய இருவரும் ரோட்டில் சரக்கும் கையுமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அப்போது அவர்களை பார்த்து நடுரோட்டில் இப்படி மது அருந்துகிறீர்களே’ என்ற ஒரு இளைஞர் தட்டிக்கேட்டபோது அதற்கு இருவரும் தகாத வார்த்தைகளில் அந்த இளைஞரை திட்டியதோடு ’நான் வீட்டிலும் குடிப்பேன், ரோட்லயும் குடிப்பேன், நாட்லயும் குடிப்பேன் என வம்பு பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 திரை உலகில் பிரபலமாக இருக்கும் கார்த்திக் சீனிவாசன் மற்றும் சாம்ஸ் ஆகிய இருவரும் நடுரோட்டில் மது போதையில் இப்படி பேசி இருக்க வாய்ப்பு இல்லை என்றும் ஏதாவது ஒரு திரைப்படத்தின் புரமோஷனுக்காக எடுக்கப்பட்ட பிராங்க் வீடியோவாக இந்த வீடியோ இருக்கும் என்றும் சில ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை இந்த வீடியோ உண்மையாக இருக்கும் பட்சத்தில் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலர் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement