• Jun 02 2024

அஜித் படத்திற்கு உதவி இயக்குநராக பணிபுரிந்த நடிகர் விக்ரம் பிரபு

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் நுழைந்தாலே அவர்கள் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு வைப்பார்கள் ரசிகர்கள். 

மேலும்  அப்படி தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பேரனாக கும்கி படம் மூலம் அறிமுகமானவர் விக்ரம் பிரபு.

அப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது, ஆனால் அதன்பின்னர் அவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை.

அண்மையில் அவர் நடிப்பில் வெளியான போலீஸ் கதையான டாணாக்காரன் மக்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்றது.

இவ்வாறுஇருக்கையில் இவர் அஜித்தின் அசல் மற்றும் ஆர்யாவின் சர்வம் படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளாராம்.

இந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement