• May 19 2024

சிறு வயதில் செம ஸ்டைலாக கூலிங் கிளாஸ் போட்டுகொண்டு தனது குடும்பத்துடன் நிற்கும் நடிகர் விஜய்- அரிதான போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தற்பொழுது வசூல் மன்னனாக இருப்பவர் தான் விஜய். மிகுந்த எதிர்பார்ப்பில் மத்தியில் இவரது நடிப்பில் இறுதியாக பீஸ்ட் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இருப்பினும் இப்படம் கடுமையான விமர்சனங்களையே பெற்றது.

அதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் பிரகாஷ் ராஜ் சரத்குமார் ராஷ்மிகா மந்தனா ஷாம் குஷ்பு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது. இப்படம் குறித்த அப்டேட்டுக்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

மேலும் இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 67 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.விக்ரம் படம் அமோக வெற்றியைப் பெற்றதால் தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.


இந்த நிலையில் இவர் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் இயக்குனர் எஸ்.ஏ.சி மற்றும் ஷோபா சந்திரசேகரின் மகன் என்பதை நாம் அறிவோம். விஜய்க்கு வித்யா எனும் ஒரு தங்கை இருந்தார். இவர் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்துவிட்டார்.

இந்நிலையில், தனது சிறு வயதில் செம ஸ்டைலாக கூலிங் கிளாஸ் போட்டுகொண்டு தாய், தந்தை மற்றும் தங்கையுடன் நடிகர் விஜய் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement