• May 05 2024

மீண்டும் புதிய படத்தில் கதாநாயகனாக கமிட்டாகியிருக்கும் நடிகர் சூரி- அதுவும் யாருடைய இயக்கத்தில் தெரியுமா?

stella / 7 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் தான் சூரி. இவர் தற்பொழுது கதாநாயகனாக நடித்து வருகின்றார். அதன் படி அண்மையில் இவரது நடிப்பில் விடுதலை என்னும் திரைப்படம் வெளியாகியது.இப்படத்தில் சூரியடன் இணைந்து விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, சேத்தன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.


அத்தோடு இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது.இதற்கான வேலைப்பாடுகளில் படக்குழுவினர் முழு வீச்சாக ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் மீண்டும் வெற்றிமாறனுடன் சூரி புதிய படத்தில் இணைந்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திலும் சூரி நாயகனாகவே இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் இன்றைய தினம் பூஜையுடன் கும்பகோணத்தில் நடந்துள்ளது. இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கவுள்ள இந்தப்படத்திற்கு வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார்.


யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். படத்தில் சூரியுடன் சசிக்குமாரும் முதன்மை கேரக்டரில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.மேலும் படத்தில் உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஷிவதா நாயர், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement