• Sep 22 2023

ஷுட்டிங்கில் ஆடை மாற்ற போன போது நடந்த சம்பவம் - கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை

stella / 1 week ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நடிகையான நக்‌ஷத்ரா நாகேஷ் லக்‌ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய புகழை அடைந்தார். ஜோடி நம்பர் 1, வாணி ராணி, ரோஜா, மின்னலே, நாயகி மற்றும் திருமகள் என ஏகப்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரை மட்டுமின்றி சினிமாவிலும் பல படங்களில் சிறிய ரோல்கள் முதல் ஹீரோயினாக வரை நடித்துள்ளார் நக்‌ஷத்ரா. சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்தில் சீரியல் நாயகியாகவே நடித்து அசத்தியிருப்பார். இரும்பு குதிரை, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.


இவர் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் என்னும் சீரியலில் நடித்து வருகின்றார்.இந்தத் தொடர் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது.மேலும் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் படம் ஒன்றில் நடித்தபோது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது படம் ஒன்றில் தான் நடித்துக் கொண்டிருந்தபோது, தன்னை கேரவனில் சென்று உடை மாற்ற தயாரிப்புத்தரப்பு கூறியதாகவும் அந்த வேனில், ஜன்னல்கள் இல்லாமல் வெறும் கண்ணாடிகள் மட்டுமே இருந்ததாகவும் வேனில் வெளியில் 5 பேர் உட்கார்ந்திருந்ததாகவும் கூறியுள்ளார்.


 தான் உடை மாற்றப் போவது குறித்து தெரிந்தும் அவர்கள் அந்த இடத்தைவிட்டு நகராமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.தான் உடை மாற்றப் போவதை பார்ப்பதற்காகவே அவர்கள் அங்கே இருந்ததை போல தனக்கு தோன்றியதாகவும் நக்ஷத்ரா கூறியுள்ளார். இதையடுத்து வேறு வழியின்றி, தான் அருகில் இருந்த வீட்டிற்கு சென்று அவர்களிடம் கேட்டு உடை மாற்றிக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

பிரபலமான ஆங்கர், சின்னத்திரை நடிகை என பன்முகம் கொண்ட நக்ஷத்ராவின் இந்த கசப்பான அனுபவம் தற்போது ரசிகர்களின் வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement