• May 18 2024

சிறுத்தை போன்ற வண்ண பிகினியில் ஒல்லிபெல்லியாக இருக்கும் ஷன்சிகா- வேற லெவல் போட்டோ ஷுட்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்த முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ஹன்சிகா மோத்வானி. இவர் விஷால், சூர்யா, விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததோடு தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகைகளில் ஒருவராகவும வலம் வருகின்றார்.


ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்து வந்த இவர் பின்பு கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களிலும் பேயாக நடித்து நல்ல பாராட்டுகளை பெற்றுக் கொண்டார்.


மேலும் அண்மையில் இவரது50 வது படமான மஹா திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் சிம்பு கேமியோ ரோலில் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டு இருந்தனர். ஆனால் 6 மாத காலத்தில் இந்த ஜோடி பிரிந்து விட்டது.


தற்போது தனியாக இருக்கும் ஹன்சிகா பாலிவூட் பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.அத்தோடு உடல் எடையைக் குறைத்து ஒல்லிபெல்லியாக மாற்றி வேற லெவலில் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.


அந்த வகையில் தற்போது சிறுத்தை போன்ற வண்ண பிகினி  உடை அணிந்து கொடுத்துள்ள கவர்ச்சி போஸ்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement