• Sep 08 2024

ராமராஜனின் ‘சாமானியன்’ படத்தை விட மோசமா? மோகனின் ‘ஹரா’வின் பரிதாப வசூல்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக அளவில் தயாரிப்பாளரையும் விநியோகஸ்தரையும் தியேட்டர் உரிமையாளர்களையும் ஏமாற்றிய படம் என்றால் அது ராமராஜன் நடித்த ’சாமானியன்’ என்று சொல்லலாம். அந்த படம் மொத்தமே ஒரு கோடி ரூபாய் மட்டும் வசூல் செய்து விளம்பர செலவு கூட கையில் வரவில்லை என்று தயாரிப்பாளர் புலம்பி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மோகன் நடித்த ‘ஹரா’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படமும் முதல் நாளில் மோசமான வசூல் செய்துள்ளதாகவும், ஆனால் ’சாமானியன்’ அளவுக்கு முதல் நாள் வசூல் மோசம் இல்லை என்றும் கூறப்படுகிறது.



’சாமானியன்’ திரைப்படம் முதல் நாளில் 25 லட்ச ரூபாய் வசூல் செய்த நிலையில் ’ஹரா’ திரைப்படம் முதல் நாளில் 50 லட்சம் ரூபாய் வசூல் செய்திருப்பதாக தெரிகிறது. மேலும் சனி ஞாயிறு ஓரளவுக்கு பிக்கப் ஆனால் ’ஹரா’ படத்தின் மொத்த வசூல் இரண்டு கோடியை தாண்டாது என்றும் கூறப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் இயக்குனர் விஜய் ஸ்ரீ சொதப்பலான படத்தை எடுத்து வைத்திருந்தார் என்றும், படத்தில் சுத்தமாக லாஜிக்கே இல்லை என்றும், படுமோசமான திரைக்கதை என்றும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தை மோகன் மிகவும் எதிர்பார்த்து இருந்ததாகவும், இந்த படம் ஹிட்டானால் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தின் தோல்வி காரணமாக அவர் இனி ’கோட்’ மாதிரி படங்களில் சின்ன சின்ன வேடங்களில் தான் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement