• May 10 2024

தனது சொந்த ஊரான மதுரையில் நடிகர் வடிவேலு வசித்த வீட்டைப் பார்த்திருக்கின்றீர்களா?- ஷேர் செய்து வரும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் வடிவேலு. தமிழ் திரைப்படத்துறையில் "வைகைப் புயல்" என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள் தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகராக வலம் வருகின்றார்.

நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து சினிமா ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மூழ்க வைத்தவர். இவரது நடிப்பில் வெளியாகிய ஃப்ரண்ட்ஸ், சச்சின் சந்திரமுகி திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களால் பேசப்படும் படங்களாகவே இருக்கின்றன.

இவ்வாறு சினிமாவில் வேற லெவலில் ரீச்சாகி வந்த நடிகர் வடிவேலு இயக்குநர் ஒருவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பல வருடங்கள் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். இதனால் ரசிகர்கள் அனைவரும் சோகத்துக்குள்ளாகினார்கள். இப்போது வரையிலும் அவரது காமெடிகள் தான் மீம்ஸ்களாக அதிகம் பயன்படுகின்றது.

அந்த வகையில் தற்பொழுது ரி என்ட் ரி கொடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். மேலும் வடிவேலு ஒரு மதுரைக்காரர் இவருடைய சொந்த வீட்டின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement