விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதன்படி, இம்முறை ஆரம்பிக்கப்பட்ட சீசன் 7 இல் இரண்டு வீடு கான்செப்ட் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
அதன்படியே பல சர்ச்சைகளும் அங்கே கிளம்பிக் கொண்டு தான் இருந்தது. ஆரம்பத்தில் விசித்திரா மற்றும் ஜோவிகா இடையே படிப்பு சம்பந்தமான சண்டை வெடித்தது. பிறகு நிக்சன் மற்றும் ஐசுவின் மொத்த காட்சிகளும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது ஹிந்தி பிக்பாஸில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்று மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளது.
ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 17ஆம் சீசனில் நடிகை இஷா மால்வியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே போட்டியாளராக அறிமுகமாகி இருந்தார்.
அதை தொடர்ந்து அவருடைய காதலர் சமர்த் ஜுரேல் இரண்டாவது வாரத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் அறிமுகம் ஆகி இருந்தார். இவ்வாறான நிலையில், அவருடைய காதலர் கட்டாயப்படுத்தி முத்தம் கொடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதை பார்த்த பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தற்போது குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது.
Listen News!