• Jan 19 2025

புதிய வீட்டிற்கு பூஜை போட்ட இயக்குனர்... குடும்பத்துடன் கலந்து கொண்ட நடிகர் ஆர்யா..

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் ஏ.எல்.விஜய் தமிழ் சினிமாவில் மிகவும் தரமான படைப்புகளை கொடுத்த ஒரு வெற்றி இயக்குனர். 2007ம் ஆண்டு கிரீடம் படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் மதராசப்பட்டினர், தெய்வ திருமகள், தலைவா, வனமகன், தேவி 2, தலைவி என நிறைய தரமான படங்களை இயக்கியிருந்தார்.


சினிமாவில் ஆக்டீவாக இருந்த ஏ.எல்.விஜய் சொந்த வாழ்க்கை குறித்து நமக்கு தெரியும். 2014ம் ஆண்டு நடிகை அமலாபாலை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர் 2017ல் அவரை விவாகரத்து செய்தார். பின் 2019ம் ஆண்டு ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்தார்.


இந்த நிலையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் புதிய வீட்டிற்கு பூஜை போட்டுள்ளார். அவர் புதியதாக கட்டியதா அல்லது வாங்கிய அபார்ட்மென்ட்டா என்பது தெரியவில்லை. அவரின் புதிய வீட்டின் பூஜை பிரபலங்கள் ஆர்யா மற்றும் சயீஷா கலந்துகொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


 

Advertisement

Advertisement