• Jun 29 2024

நடிகர் அஜித், மகளுடன் மதுபானக் கொண்டாட்டமா..?கடும் விமர்சனங்களுக்கு உள்ளான புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

‘அமராவதி’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் அஜித்.

இவர் சினிமாவை தாண்டி பல விஷயங்களில் தனது விருப்பத்தை காட்டி வருபவர். இப்போது அவர் உலகம் முழுவதும் பைக்கில் சுற்றுவதை விருப்பமாக வைத்துள்ளார்.

மேலும் இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் எப்போதும் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் உலகளவில் ரூ.200 கோடிக்கும் வசூலை குவித்து சாதனை படைத்தது.

மேலும் அப்படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படமாக உருவாகி வரும் AK61 திரைப்படத்தில் நடித்து வந்தார்.அத்தோடு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் அஜித் கதாபாத்திரம் எப்படி இருக்குமென அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதற்கிடையே தற்போது நடிகர் அஜித் அவரின் மனைவி, மகள், மகன் என குடும்பத்துடன் ஒரு பார்ட்டி விருந்தில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த புகைப்படத்தில் அஜித் கையில் கிளாஸ் அவரின் அருகில் நபரின் கையில் மதுபானம் உள்ளது போல் தெரிகிறது.

மேலும் இதை கண்ட இணையதள வாசிகள் பல்வேறு விதமாக அந்த புகைப்படத்தை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். அத்தோடு தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள அஜித் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படமா என்பது சரியாக தெரியவில்லை. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement