• May 08 2024

தனியாக ஹெலிகாப்டரில் சென்று மாஸ் காட்டும் நடிகர் அஜித்- வேற லெவலில் கமெண்டுகளை பதிவு செய்து வரும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

மணாலியில் தங்கியுள்ள நடிகர் அஜித், அங்கு சுற்றிப் பார்ப்பதற்காக ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். அப்போது எடுத்த வீடியோவும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் அஜித் தற்போது ஏ.கே.61 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.எச்.வினோத் இயக்கும் இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது.இப்படத்திற்காக பிரம்மாண்டமான வங்கி செட் அமைத்து ஐதராபாத்தில் பெரும்பாலான ஷூட்டிங்கை முடித்த படக்குழு, இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்த விரைவில் பேங்காக் செல்ல உள்ளது. 

அங்கு மாஸான சண்டைக்காட்சி ஒன்றை படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக அங்கு 35 நாட்கள் தங்கி படப்பிடிப்பை நடத்த உள்ளாராம் அஜித். பேங்காக் செல்வதற்கு முன்னர் நடிகர் அஜித், தற்போது தனது நண்பர்களுடன் பைக் ரைடிங் சென்றுள்ளார். 


 கடந்த இரு வாரங்களாக அப்பகுதியில் பைக் ரைடிங் செய்து வருகிறார் அஜித். அவருடன் நடிகை மஞ்சு வாரியரும் இந்த பைக் ட்ரிப்பில் இணைந்து சில நாட்கள் சுற்றினார்.இந்நிலையில், தற்போது மணாலியில் தங்கியுள்ள நடிகர் அஜித், அங்கு சுற்றிப் பார்ப்பதற்காக ஹெலிகாப்டரில் சென்றுள்ளார்.


 அப்போது எடுத்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் நடிகர் அஜித்தின் நண்பர் சுப்ராஜ் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்த்த ரசிகர்கள் செம்ம மாஸாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement