• Jan 15 2025

பிரபல சீரியல் நடிகை சித்ரா மரண வழக்கில் கணவருக்கு வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்பு

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஓடிக்கொண்டிருந்த சீரியல் தான் பாண்டியன் ஸ்டார் சீரியல். இந்த சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்தவர் தான் நடிகர் சித்ரா.

சின்னத்திரையில் உலாவரும் மிகவும் துடிப்பான நடிகைகளுள்  இவரும் ஒருவராக காணப்பட்டார். பாண்டியன் ஸ்டோர் சீரியல் மட்டுமின்றி பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாகவும் காணப்பட்டார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் மிகவும் போல்டான பெண்ணாக நடித்து வந்த இவர், ஷூட்டிங் முடிந்து ஹோட்டலுக்கு சென்றதும் அங்கு இருந்து விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

அதாவது இவர் தனது காதலரான ஹேம்நாத் உடன் தனியாக வசித்து வந்துள்ளார். அன்றைய தினமும் சூட்டிங்  முடிந்து இரவு அவருடன் பேசி விட்டே தூங்குவதற்காக போனதாகவும் அவர் அந்த நேரத்தில் வெளியே போயிட்டு வரும்போது சித்ரா பேனில் தூக்கு மாட்டிக் கொண்டதாகவும் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.


ஆனாலும் சித்ராவின் வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் தான் குற்றவாளியாக கருதப்பட்டார். எனும் சித்ராவுக்கு தனிப்பட்ட ரீதியில் கடன் சுமை இருப்பதாகவும் பல்வேறு காரணங்கள் அந்த நேரத்தில் கூறப்பட்டன. 

இந்த நிலையில் தற்போது சித்ராவின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக அவர்களது பெற்றோரால் தொடரப்பட்ட  வழக்கிலிருந்து ஹேம்நாத் விடுவிக்கப்பட்டுள்ளார். ஹேம்நாத்திற்கு எதிராக சரியான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளதாம்.

Advertisement

Advertisement