• May 04 2024

அய்யய்யோ உச்சக்கட்ட வெறியில் இருக்காங்களே- லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகிய 5 நிமிடத்தில் இத்தனை மில்லியன் வியூவர்ஸா?

stella / 6 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் லலித்குமார் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கும் திரைப்படம் தான் லியோ.இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

 இதுவரை லோகேஷ் கனகராஜ் இயக்கிய நான்கு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருப்பதால் கண்டிப்பாக இந்தப் படமும் அந்த வரிசையில் இணையும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக படத்தின் இரண்டு சிங்கிள்களும் அட்டகாசமாக இருந்தன.


 அதேபோல் போஸ்டர்களுக்கும் ரசிகர்கள் பெரும் வரவேற்பை கொடுத்தனர்.லியோ படத்தின் ஆடியோ லான்ச்சை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் சில காரணங்களால் அந்த இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும் ரசிகர்களை திருப்திப்படுத்தும்விதமாக அடுத்தடுத்து படத்திலிருந்து அப்டேட்டுகள் வெளியாகிக்கொண்டே இருந்தன. 


உச்சக்கட்டமாக இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அத்தோடு இப்படத்தின் ட்ரெய்லர் வௌியாகி 5 நிமிடத்தில் ஒரு மில்லியன் வியூவர்ஸைப் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ட்ரெஸ்லர் வெளியாகியதால் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement