• May 04 2024

ஆளாளுக்கு என் உயிரைப்போட்டு எடுத்தால் நான் என்னடி பண்ணேலும்- செம மாஸாக வெளியாகிய லியோ படத்தின் ட்ரெய்லர்

stella / 6 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் லியோ. இந்தப் படத்தில் விஜய் லியோதாஸ் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதாக தெரிகிறது. மேலும் அவருக்கு இதில் இரண்டு கெட்டப்புகள் என்றும் ஒரு கேங்ஸ்டர் குடும்ப கதைதான் என்றும் சொல்லப்படுகிறது.

இப்படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், மாத்யூ தாமஸ், ப்ரியா ஆனந்த், அனுராக் காஷ்யப், சாண்டி மாஸ்டர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதோடு அப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீஸாகக் காத்திருக்கின்றது.


படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து சென்சாருக்கு சென்று யு/ஏ சர்ட்டிஃபிகேட்டை படம் பெற்றிருக்கிறது.இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்றைய தினம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது.இதனால் அதனை பார்ப்பதற்கு ரோகிணி தியேட்டரில் கூட்டம் நிரம்பி வழிகின்றது.

இப்படியான நிலையில் லியோ படத்தின் ட்ரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இதனால் திருவிழா, தீபாவளி போல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement