• Sep 19 2024

ஒரு டீஸ்பூன் நெய் போதும்…நடிகர் சரத்குமாரின் பிட்னஸுக்கு இது தான் காரணமா..? அவரே கூறிய தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் சரத்குமார். இவர் ஆரம்பத்தில் பிரபு, கார்த்திக், விஜயகாந்த் போன்றவர்களின் படங்களில் துணை நடிகராக நடித்தே கதாநாயகனாக அறிமுகமாகினார். அதிலும் இவர் நடிப்பில் வெளியாகிய சூரியன் திரைப்படம் மெகா ஹிட்டாக அமைந்தது.

மேலும் சூப்பர் ஹீரோ என்று அழைக்கப்படும் இவர் நடிப்பில் வெளியாகிய கட்டபொம்மன், அரண்மனை காவலன், நம்ம அண்ணாச்சி, போன்ற பல படங்கள் தொடர்ந்து ஹிட் ஆனது. அதன் பிறகு பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது தான் நாட்டாமை. இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தொடர்ந்து பல திரைப்படங்களில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் இவர் 80களில் தொடங்கி இன்று வரை தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தனக்கு ஏற்றவாறு நடித்து ஹிட் கொடுப்பதில் வல்லவர்.

இவ்வாறு இருக்கையில் என்னதான் இப்போதுள்ள நடிகர்கள் தங்களது உடலை பராமரித்து வந்தாலும் அவர்களுக்கெல்லாம் முன்னோடியாக கருதப்படுபவர் நடிகர் சரத்குமார். 1990களில் தனது கட்டு மஸ்தான் உடலுக்காகவே பெயர் போனவர்.

1974-ஆம் ஆண்டு மிஸ்டர் மெட்ராஸ் யூனிவர்சிட்டி பட்டத்தை வென்றவர்.அத்தோடு பள்ளி மற்றும் கல்லூரியில் ஹாக்கி, ஃபுட்பால், கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டவர்.

இவ்வாறு 70 வயதை நெருங்கியுள்ள சரத்குமார் இன்றும் உடற்பயிற்சி செய்து இளைஞர்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார். அவரது டயட்டை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தினமும் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடித்துவிட்டு பின்னர் பிளாக் காஃபியில் ஒரு டீஸ்பூன் நெய்யை கலந்து குடிப்பாராம்.

அதன் பின்னர் உடற் பயிற்சி செய்துவிட்டு ஒன்பது மணிக்கு நான்கு முட்டைகளின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டு 11 மணிக்கு ஏ.பி.சி என்று அழைக்கப்படும் ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஜூஸை குடித்துவிட்டு மதியம் பெப்பர் மற்றும் உப்பினால் வேகவைக்கப்பட்ட சிக்கனை மட்டும் சாப்பிடுவாராம்.

சிக்கன் என்றால் குழம்பு அல்ல, வெறும் வேக வைக்கப்பட்ட இரண்டு துண்டு சிக்கன். அரிசிச் சோறோ அல்லது சப்பாத்தியோ கூட சேர்த்துக் கொள்ள மாட்டாராம். பின்னர் மாலை கொஞ்சம் வேர்க்கடலை சேர்த்த அவல் உண்டுவிட்டு ஏழு மணிக்கு மட்டன் சூப் அல்லது சிக்கன் சூப் குடித்துவிட்டு அத்துடன் அன்றைய உணவை முடித்துக் கொண்டு மீண்டும் மறுநாள் காலை அதே டயட்டை கடைபிடிப்பதாக சரத் குமார் கூறியுள்ளார்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement