• May 08 2024

ஏ.கே 61 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட திடீர் விபத்து- படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பரபரப்பு

stella / 1 year ago

Advertisement

Listen News!

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் தற்போது தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை வலிமை இயக்குநரான எச். வினோத் இயக்குவதோடு போனிகபூர் தான் தயாரித்து வருகின்றார். ஹைதராபாத்தில் சென்னையில் உள்ள மவுண்ட் ரோடு போன்ற செட் அமைக்கப்பட்டு முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.

இப்படத்தின பெரும்பாலான படங்களின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெறுவதால் இங்குள்ள சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என ஆர் கே செல்வமணி குற்றச்சாட்டை முன்வைத்ததைத் தொடர்ந்து படப்பிடிப்பானது சென்னையில் நடைபெற்று வருகின்றது.

படப்பிடிப்பை நிறுத்தி விட்டு சுற்றுலா சென்றுள்ள அஜித் தற்பொழுது நாடு திரும்பியுள்ளார். அத்தோடு துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்தான வீடியோவும் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது.

சென்னையில் அஜித் இன்றி ஏ.கே 61 -ன் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த சூட்டிங்கின் போது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை ஆனால் ட்ரோன் கேமரா சுவற்றில் மோதி நொறுங்கியுள்ளது. இதனால் சிறிது நேரம் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement