• May 13 2024

சமந்தாவின் அம்மா மற்றும் அப்பாவின் வைரலாகி வரும் புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபல்யமான நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா. இவர் நடிப்பில் இறுதியாக காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தில் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாராவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சகுந்தலம் யஷோதா மற்றும் குஷி ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.இது மட்டுமின்றி ஹிந்தியில் மொத்தம் 3 படங்களுக்கும் மேல் கமிட்டாகி இருக்கிறாராம் சமந்தா.அந்த வகையில் அக்‌ஷய் குமார், ஆயுஷ்மான் குரானா, ரன்வீர் சிங் என மூன்று ஹீரோக்களுடன் நடித்து வருவதாக கூறப்படுகின்றது.

அந்த வகையில் சமீபத்தில் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கி வரும் காஃபி வித் கரண் 7 நிகழ்ச்சியில் பங்குபற்றினார். இவருடன் அக்‌ஷய் குமாரும் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமந்தாவின் அப்பா, அம்மா இருவரினதும் புகைப்படமும் திடீரென வைரலாகி வருகின்றது. இப்படத்திற்கு ரசிகர்கள் தமது லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement