• Jun 07 2026

இலங்கை யுத்தபூமியில் ஒரு காதல் கதை.! வெற்றிமாறன் பாராட்டால் எகிறும் எதிர்பார்ப்பு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

நவீன் சந்திரா நடிப்பில் சோமிதரன் இயக்கத்தில் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம்தான் 'நீளிரா'. இந்த படத்தில் சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, 'கயல்' வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா ஆகியோர் நடித்துள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது திருமணம் ஒன்றிற்காக காத்திருக்கும் மணமக்களும், இரண்டு வீட்டாரும் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்டே இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் விளம்பர பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்,  நீளிரா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்த கருத்துகள் தற்போது வைரலாகி வருகின்றன.


அதன்படி அவர் கூறுகையில், போர்ச்சூழல் காணப்படும் ஒரு இடத்தில் திருமணம் ஆகப்போகும் பெண், ஒரு புகைப்படக் கலைஞன் என சில முக்கிய கதாபாத்திரங்கள் தங்கள் நியாயங்களை எடுத்துக்கூறும் வகையில் காணப்படுகின்றன. சில கதாபாத்திரங்களை இயக்குநர் சித்தரித்த விதம் மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும் என்று பாராட்டினார்.

மேலும், இந்த படம் பல நூறு கோடி சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்படவில்லை. வெறுப்பையும் வன்முறையையும் பணமாக்க விரும்பாத படமாக காணப்படுகிறது. எந்த சாதி, சமூகத்தையும் நேரடியாக விமர்சிக்காமல் சம்பவங்களை சொல்லக்கூடிய படமாக அமைந்துள்ளது  என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement