• Jan 18 2025

புத்தனாக மாறியிருக்கும் தமிழின் புகழ் பூத்த நடிகர்...! இது என்னப்பா புது ட்ரென்ட்டா ?

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக அறியப்படும் நடிகர் தனுஷ் தனது 50 வது திரைப்படத்தின் வெளியீட்டிற்க்காக காத்திருக்கிறார்.தனுஷின் 50வது படமான "ராயன்" தனுஷின் இயக்கத்திலேயே உருவாகியிருப்பது அவரது ரசிகர்களுக்கு மேலும் படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்துள்ளது.

Raayan - Wikipedia

தற்போது அடுத்தடுத்த படத்தின் அறிவிப்புகள் மற்றும் வெளியீட்டிற்கான வேலைகள் என சரியான பிஸியாக இருந்த நடிகர் தனுஷ் வருகிற 26 ஆம் திகதி உலக அளவில் ராயன் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகி படத்தின் இசை வெளியீட்டு விழா நிறைவு பெற்று தற்போது சற்று ஓய்வாக உள்ளார் என சொல்லலாம்.

Image

இந்நிலையில் தனுஷின் புதிய எக்ஸ் தள பதிவு பலரையும் வியக்க வைத்துள்ளது.ஆலயமொன்றின் முன் மரநிழலில் தியானத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் தனுஷ் "இங்கு பரந்து கிடக்கும் பூமி,உனக்கும் தந்ததைய்யா,இங்கு அத்தனை சாமியும்,உனக்கும் சொந்தமைய்யா…  " என பதிவொன்றையும் இட்டுள்ளார்.இப் பதிவை பார்த்த ரசிகர்கள் தனுஷ் புத்தனாக மாறிவிட்டாரோ என கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். 



Advertisement

Advertisement