கேரளாவைச் சேர்ந்த ராப் பாடகர் வேடன் , தன்னை திருமணம் செய்வதாக கூறி வேடன் ஏமாற்றியதாக இளம்பெண் மருத்துவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களிலும், செய்தி ஊடகங்களிலும் அதிகமாக பேசப்படும் ஒரு பெயர் தான் வேடன்.
கேரளாவைச் சேர்ந்த மலையாள ராப் பாடகரான இவரது பாடல்கள் தான் சமீப காலமாக ரீல்ஸ், ஸ்டோரீஸ் உள்ளிட்டவற்றில் அதிகம் இடம்பெறுபவை.
வேடன் என்ற மேடைப் பெயரால் பிரபலமாக அறியப்படும் ஹிரந்தாஸ் முரளி, கேரளாவின் திருச்சூரில் பிறந்தவர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் திருச்சூரில் பிறந்தவர் தான் ஹிரந்தாஸ் முரளி என்கின்ற வேடன்.
இவ்வாறாக ராப் பாடல்கள் மூலமாக சர்வதேச ரீதியில் இலட்சக்கணக்கான இரசியர்களால் வேடன் ஈர்க்கப்பட்டு வருகிறார்.
இவரது ராப் பாடல்களை கேட்பதற்கு என்றே இவர் பங்குபற்றும் இசைநிகழ்வுகளில் திரளும் ரசிகர்கள் ஏராளம்.
இது இவ்வாறு இருக்க வேடன் மீது, இன்று அதிகாலை, எர்ணாகுளம் அருகே இருக்கின்ற திருக்காக்கரை காவல் நிலையத்தில் ஒரு வழக்கு வந்து பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
அதாவது instagram மூலமாக அறிமுகமான கோட்டையம் பகுதியை சேர்ந்த இளம் பெண் மருத்துவரிடம் திருமண ஆசை வார்த்தை கூறி பலமுறை பணம் பெற்றதாகவும் வேடன் மீது குறித்த மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் வேடன் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். தொடர்ந்து காவல்துறையினர் அவரை தேடி வருகின்றார்கள்.
இவ்வாறாக, பிரபல பாடகரான வேடன் மீது பெண்ணொருவர் வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Listen News!