• Apr 28 2024

கேமராவுடன் தொடர் பயணம்...மாஸான லுக்கில் கமல்..இது தான் விஷயமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஒருபுறம் தன்னுடைய தயாரிப்புப் பணியையும் முடுக்கி விட்டுள்ளார். இதனை அடுத்ததாக சிவகார்த்திகேயனின் படத்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் ஆரம்பமாகி உள்ளது.

இதனிடையே ஷங்கர் இயக்கத்தில் 4 வருடங்களாக முடங்கியிருந்த இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கையும் கடந்த ஆண்டில் துவக்கி அதன் சூட்டிங்கில் விறுவிறுப்பாக பங்கேற்றுள்ளார். படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். அத்தோடு சென்னை, திருப்பதி உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெற்ற நிலையில், தற்போது வெளிநாடுகளில் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது.

தைவானில் 4 நாட்கள் படத்தின் சூட்டிங் நடைபெற்றது. இதன் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.இதனைத்  தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் தற்போது படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. அங்கு கமல்ஹாசன் பங்கேற்றும் அதிரடி ரயில் ஆக்ஷன் காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. அத்தோடு பிரிட்டீஷ் ஆட்சிகாலத்தில் நடைபெறுவதாக இந்த ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி, அந்த காலத்திய நபர்களை குறிக்கும்வகையில் இந்த சூட்டிங்கில் கேரக்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக தைவானில் இருக்கும்படியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட கமல்ஹாசன், தொடர்ந்து தென்னாப்பிரிக்காவிலும் சூட்டிங்கிற்கு முன்னதாக தான் ரிலாக்ஸாக இருக்கும் புகைப்படஙகளையும், இசைக்கருவியை வாசிக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். எனினும் தற்போது மீண்டும் புதிய படத்தையும் வெளியிட்டுள்ளார்.அத்தோ அந்தப் புகைப்படத்தில் அவர் கேமராவுடன் வெளியில் கிளம்புவதாக காணப்படுகிறது. முன்னதாக இதேபோல ஒரு புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார்.


இவ்வாறுஇருக்கையில் தற்போது வெளியாகியுள்ள புதிய புகைப்படத்தில் சூரிய அஸ்தமனத்திலும் தன்னுடைய தேடலை நோக்கிய பயணத்தில் கையில் கேமராவுடன் புறப்பட்டுள்ளார் கமல்ஹாசன். அவர் புகைப்படங்களை எடுத்துத் தள்ளும் முன்பு, அழகான பின்புலத்தில் அவரை மற்றொருவர் புகைப்படம் எடுத்துள்ளது தற்போது ரசிகர்கள் பார்வைக்கு கிடைத்துள்ளது. அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கமல்ஹாசன்.

Advertisement

Advertisement

Advertisement