விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.
மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மத்தியில் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகித்து வருகின்றது. இதில் குறிப்பிட்ட அளவு கேரக்டர்கள் காணப்பட்டாலும், அவர்களை உள்ளடக்கி இந்த சீரியலின் கதைக்களம் நகர்ந்து வருகிறது.
ரசிகர்களுக்கு சலிப்பை கொடுக்காத வகையில் நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்துடன் சிறகடிக்க ஆசை ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இதில் முத்து–மீனா என்ற கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் நிலையில், ரசிகர்கள் இந்த கதையில் வில்லியாக நடிக்கும் ரோகிணி கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
சமீப காலமாகவே ரோகிணி பற்றிய உண்மைகள் தெரிய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது ரோகிணியின் உண்மையான வாழ்க்கை பற்றிய ரகசியங்கள் அத்தனையும் மனோஜ் குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது. இதனால் தற்போது மனோஜ்க்கு விவாகரத்து கொடுக்கும் நிலைக்கு ரோகிணி வந்துள்ளார்.

இந்த நிலையில் சின்னத்திரை சீரியல் நடிகை சல்மா அருணின் குழந்தை பருவ புகைப்படம் வைரல் ஆகி வருகின்றது. அவர் தனது குழந்தை பருவ புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.
அவர் தனது சகோதரியின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறு வயதில் இருவரும் இணைந்து எடுத்த பழைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

குறித்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இது சல்மா அருணா? என்று ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் அவரின் குழந்தை பருவ தோற்றத்தையும் தற்போதைய திரை தோற்றத்தையும் ஒப்பிட்டு, அதே கவர்ச்சி, அதே முகபாவனை என பாராட்டி வருகின்றனர்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருவதுடன், ரசிகர்கள் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கேரக்டரில் சல்மா அருண் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!