• Apr 15 2026

ஈழத்து குயில் கில்மிஷாவின் அட்டகாசமான பாடல்! கேக்க கேக்க Vibe ஆகுதே...

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வார இறுதியிலும் சனி, ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் பிரபலமான ஷோ தான் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ். இது தற்போது இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டது.

உலகளவில் குழந்தைகளின் இசை திறமையை அறிய வைக்கும் நிகழ்ச்சியாக 'சரிகமப' காணப்படுவதோடு, மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தையும், நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.  

இம்முறை  லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3  இல் மொத்தமாக 28 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர்.


இதில் பங்கேற்ற குழந்தைகளின் திறமையை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான முறையில் இறுதிவரை நகர்த்திச் சென்றுள்ளனர். 

அதன்படி, இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தில் கால் பதித்துள்ளதோடு, ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ், நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் பைனலுக்கு தேர்வாகி, பட்டையை கிளப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'சரிகமப' நிகழ்ச்சியில், இறுதியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவர் மத்தியிலும் பரபரப்பாக காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில், ஈழத்து குயிலான கில்மிஷா  "முன்தினம் பார்த்தேனே" என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வழமை போலவே அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். எனினும் பொறுத்து இருந்து பார்ப்போம் நாளைய தினம் யார் இறுதியில் வெற்றி பெறுவார் என....


Advertisement

Advertisement