• Jan 19 2025

என் பொண்ணா இருந்தா அத பண்ணிட்டு தான் வெளிய வரணும்.. எங்களையும் சேர்த்து திட்டுறாங்க..! பூர்ணிமாவின் பெற்றோர் ஆவேசப் பேட்டி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இது தற்போது 75 நாட்களைக் கடந்து இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டது.

பிக் பாஸ் வரலாற்றில் முற்றிலும் வித்தியாசமான முறையில் ஆரம்பித்த இந்த சீசன், மக்கள் மத்தியில் வரவேற்பையும் கடுப்பையும் சமமான அளவில் பெற்று வந்தது.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிலுள்ள பூர்ணிமாவின் குடும்பத்தார் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்தனர். அதில் அவரது அம்மா கூறுகையில், 


என் பொண்ணு நெகட்டிவ் கமெண்டோடு வீட்டுக்கு வரக் கூடாது. நல்லா விளையாடி அத சரி செய்துட்டு தான் வரணும் என்று நினைச்சன். நான் அவ பிக்பாஸ் வீட்டிற்குள் போகும் போது கூட முதலில் வேண்டாம் என தடுத்தன். கெட்ட பெயர் வரும் என சொன்னன். ஆனா அவ கேக்கல. அவங்க அப்பாவும் அவளுக்கு தான் சப்போர்ட்டாக தான் பேசினார். ஆனால் இப்போ தான் சரியாக விளையாடுகிறாள். பூர்ணிமா தொடர்பில் வெளியாகிற கமெண்ட்ஸ் பாத்து எனக்கு வருத்தமே வந்திட்டு. மொத்த குடும்பத்தையும் திட்டுறாங்க.. ஆனா மாயா - பூர்ணிமா நட்பு உண்மையிலேயே அழகா இருக்கு... மாயா என்று ஒரு வார்த்தை தான்.. ஓடி வருவா.. நினைச்சாலே உடம்பு எல்லாம் சிலிர்க்குது.. அவ்வளவு அழகான நட்பு.. அர்ச்சனா கூட எங்களுக்கு இன்னொரு மகள் போல தான். கடைசியா நடந்த டாஸ்க்ல பூர்ணிமா அக்கா.. அக்கானு.. அர்ச்சனாவ கூப்பிட்டா.. அப்பவே அவங்களை பார்க்கும் போது அக்கா, தங்கச்சி போல தான் இருந்துச்சு..பொறுத்திருந்து பார்ப்போம் என்றார். 

மேலும் பூர்ணிமாவின் அப்பாவிடம், பலர் விஷ்ணுவை பூர்ணிமா காதலிக்கிறாரா? என கேட்கின்றனர். இதில் உங்களது கருத்து என்ன என கேட்க, அது எப்படி நாங்க சொல்ல முடியும் இன்னும் கொஞ்ச நாள்ல பூர்ணிமாவே வெளில வந்துடுவா. அப்படி ஏதும் இருந்தா அவ கண்டிப்பா சொல்லுவா' என்றார்.


 

Advertisement

Advertisement