• May 09 2024

ஒரு போஸ்ட்க்கு 100 ரூபா... வசமாய் சிக்கிய ஆதாரம்! அம்பலமான உண்மைகள்? இது மாயாவுக்கு எதிரான சதியா? ரசிகர்கள் புலம்பல்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. இன்னும் ஒரு சில வாரங்களில் டைட்டில் வின்னர் யார் என தெரிந்துவிடும்.

இதன் ஆரம்பத்தில், 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் தான் நடிகை மாயா. இவர் ஒரு மேடை நாடக நடிகர். அத்துடன் மேடை நாடகங்களில் நடிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். 

மேலும், மாயா ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபல படுத்திய படம் என்றால் அது கண்டிப்பாக கமல் நடித்த விக்ரம் திரைப்படம் தான். குறித்த படத்தில் சின்னதாக ரோலில் நடித்திருந்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசம் ஈர்த்துள்ளார் மாயா. 


இதையடுத்து, பிக்பாஸ் வீட்டிலுள்ள மாயா அங்கு பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், மக்களை மகிழ்விப்பதில் கை தேர்ந்தவராக காணப்பட்டார்.

பிக் பாஸ் மாயா வெற்றி பெற வேண்டும் என சமூக வலைத்தளங்களில் 'VoteforMaya' மாயா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. 


இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 7 இல் மாயா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவரது ரசிகர்கள் காசு கொடுத்து போஸ்ட் பகிர வைப்பது அம்பலமாகியுள்ளது.

அதன்படி, சமூக வலைத்தளங்களில் பேமஸாக காணப்படும் நபர்களிடம், ஒரு போஸ்ட்க்கு நூறு ரூபா தருவதாகவும், கன்டென்ட் எல்லாம் நாங்களே தருவோம், நீங்க ஜஸ்ட் போஸ்ட் போட்டா போதும் என கெஞ்சுவதாகவும் சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.



Advertisement

Advertisement

Advertisement