விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் சிவாங்கி. குறிப்பாக சூப்பர் சிங்கர்ஸ் சிவாங்கிக்கு அதிகமான படங்களில் பின்னணி பாடும் வாய்ப்பையும் தனியாக ஆல்பம் பாடல்களை பாடும் வாய்ப்பைகளையும் பெற்றுத் தந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இவர் இறுதிவரை செல்லவில்லை என்றபோதிலும் ரசிகர்களை மனதை கொள்ளைக் கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சி மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அடுத்தடுத்த சீசன்களில் கோமாளியாக பங்கேற்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் சிவாங்கி. கடந்த மூன்று சீசன்களில் இவர் கோமாளியாக வித்தியாசமான கெட்டப்புகள் மற்றும் தன்னுடைய செயல்பாடுகளால் நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார். இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் குக்காக மாறி கலக்கி இருந்தார்.
இந்நிலையில் தற்போது குண்டாக இருந்த சிவாங்கி, அடுத்தடுத்த சிறப்பான செயல்பாடுகளால் 10 கிலோ வரை வெயிட் குறைத்து தற்போது ரசிகர்களை கவரும்வகையில் ஸ்லிம்மாகியுள்ளார்.
சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ்-ஆக இருக்கும் சிவாங்கி தனது புகைப்படங்கள்,வீடியோக்களை பகிர்வது வழக்கம் அந்தவகையில் தற்போது கியூட்டா டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.\
எ இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.அதனை ரசிகர்கள் வைரலாக்கியும் வருகிறார்கள்.
Listen News!