• Jan 18 2025

ஓவர் ஆட்டிட்யூட் சினிமாவுக்கு ஆகுமா? தனது மார்க்கெட்டை இழந்த குட்டி குஷ்பூ! ஆனாலும் திருந்தல...

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இந்தியில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஹன்சிகா சிம்புவை காதலித்து பிரேக்கப்பும் செய்தார். அதன்பின் உடல் எடையை குறைத்து மஹா படத்தில் மீண்டும் சிம்புவுடன் ஜோடிப்போட்டு நடித்தார்.

கடந்த ஆண்டு சோஹைல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஹன்சிகா. திருமணத்திற்கு பின் ஹனிமூன் சென்று பிஸியாக இருந்த ஹன்சிகா, தன் திருமணத்தின் வீடியோவை ஹாட் ஸ்டாரில் வெளியிட்டார்.


இதை தொடர்ந்து மீண்டும் தன் கெரியரில் கவனம்செலுத்தி வரும் ஹன்சிகா, வெப் சீரியல்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். இவர் நடிப்பில் இறுதியாக கார்டியன் படம் வெளியானது.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நாயகிகளில்  ஒருவரான  ஹன்சிகா, தனது மார்க்கெட்டை இழப்பதற்கான காரணம் என்னவென்று  கணிக்கப்பட்டுள்ளது.

அதாவது, அவர் தனது உடல் எடையை குறைப்பது தான் காரணம் என கூறப்பட்டது. ஆனாலும் அது உண்மை இல்லை. தற்போது  ஹன்சிகா நடிக்கும்  பட ப்ரோமோசங்களுக்கு வருகை தருவதை தவிர்த்து வருகிறார். 


அதேபோல தான் கொடுக்கும் பேட்டிகளுக்கு இந்த மீடியா வரக்கூடாது, அந்த மீடியா வரக்கூடாது, நான் சொல்கின்ற மீடியா தான் வரவேண்டும் என நிபந்தனைகளும் போடுகிறார். அதுபோல இந்த கேள்விகளுக்கு தான் நான் பதில் சொல்லுவேன் என ஓவர் ஆட்டிட்யூட் காட்டி வருகிறார்.

இதெல்லாம் மார்க்கெட் இருக்கும் வரை தயாரிப்பாளர்கள் பொறுத்துக் கொண்டார்கள். ஆனாலும் தற்போது பட வாய்ப்புகள் சரியத் தொடங்கிய நேரத்திலும் அவர் இவ்வாறு தான் செயற்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

Advertisement

Advertisement