• Jan 19 2025

சுதா கொங்கராவின் ‘புறநானூறு’ படப்பிடிப்பு அறிவிப்பு.. சூர்யா ரசிகர்கள் அதிருப்தி..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது என்பதும்புறநானூறுஎன்ற டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவானகங்குவாபடத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு டப்பிங் பணிகளையும் கிட்டதட்ட முடித்துவிட்டார் என்பதால் இந்த படத்தில் அவரது பணிகள் முற்றிலும் ஆக முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும்புறநானூறுதிரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது இது குறித்த முக்கிய அறிவிப்பை இயக்குனர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பில், ‘‘புறநானூறுபடத்திற்கு கூடுதல் கால அவகாசம்  தேவைப்படுவதாகவும் இந்த படத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றுவது சிறப்பு வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளார். இந்த படம் எங்கள் இருவரின் நெஞ்சங்களுக்கு நெருக்கமானது என்றும் சிறந்த படைப்பை உங்களுக்கு வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்றும் விரைவில் அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என்றும் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ‘‘புறநானூறுபடத்தின் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில காலமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் சூர்யா ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் ‘‘புறநானூறுபடத்தில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என்பதும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பதும் இது அவரது நூறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சுதா கொங்கரா தற்போதுசூரரை போற்றுபடத்தின் ஹிந்தி பதிப்பை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement