• Apr 02 2025

ரஜினியின் ‘எந்திரன்’ படத்திற்கே டப் கொடுத்த ஆர்யா-சந்தானம் படம்.. மீண்டும் ரீரிலீஸ்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தஎந்திரன்திரைப்படம் ரிலீஸ் ஆனபோது அதற்கு சில நாட்களுக்கு முன் ஆர்யா, சந்தானம் படம் ரிலீசாகி மிகப்பெரிய டப் கொடுத்தது என்பதும் வசூலில் சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த படம் தற்போது ரீரிலீசாக உள்ளது.

ஆர்யா, சந்தானம் நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி வெளியான திரைப்படம்பாஸ் என்ற பாஸ்கரன்’. நயன்தாரா நாயகியாக நடித்திருந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் என்பதும் இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வெளியான 20 நாட்களில் வெளியான படம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தஎந்திரன்’.  ’எந்திரன்படத்திற்கு முதல் நான்கு நாட்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும் அதன் பிறகு மீண்டும்பாஸ் என்ற பாஸ்கரன்படத்திற்கு தான் கூட்டம் சென்றது என்பதும் அந்த அளவுக்குஎந்திரன்படத்திற்கு டப் கொடுத்த படம் தான்பாஸ் என்ற பாஸ்கரன்என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போதுபாஸ் என்ற பாஸ்கரன்திரைப்படம் மீண்டும் ரீரிலீஸ் ஆக உள்ளது. கடந்த சில வாரங்களாகவே வெற்றி பெற்ற பழைய திரைப்படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆகிக் கொண்டிருக்கும் நிலையில்பாஸ் என்ற பாஸ்கரன்திரைப்படம் மார்ச் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகிவுள்ளது. இந்நிலையில் இந்த படம் மீண்டும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement