• Apr 02 2025

தொந்தியும் தொப்பையுமாக இருந்த ஆர்யா.. ஒரே ஆண்டில் ஆணழகனாக மாறிய ஆச்சரியம்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு தொந்தியும் தொப்பையுமாக இருந்த நடிகர் ஆர்யா, இந்த ஆண்டு ஆணழகன் போல் உடலை பிட்டாக வைத்திருக்கும் புகைப்படங்களை பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

நடிகர் ஆர்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் 'சார்பட்டா பரம்பரை' என்ற திரைப்படத்தில் நடித்த போது அசல் குத்துச்சண்டை வீரனை போல் தனது உடலை மாற்றினார் என்பதும் அதனால் தான் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் மனு ஆனந்த் இயக்கி வரும்மிஸ்டர் எக்ஸ்என்ற திரைப்படத்தில் நடிகர் ஆர்யா, ஆணழகன் கேரக்டரில் நடித்து வரும் நிலையில் அசல் ஆணழகன் ஆகவே அவர் மாறிவிட்டார்.

இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமான போது அதாவது கடந்த ஆண்டு மார்ச் மாதம் எடுத்த புகைப்படத்தையும் இந்த ஆண்டு மார்ச் மாதம் எடுத்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் கடந்த ஆண்டு அவர் தொந்தியும் தொப்பையுமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு அவர் அசல் ஆணழகன் போலவே உடலை பிட்டாக வைத்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு திரைப்படத்தில் நடிக்கும் கேரக்டருக்காக இந்த அளவுக்கு ஒரு நடிகர் ரிஸ்க் எடுத்து தனது உடலை மாற்றியுள்ளது என்பது கமல்ஹாசன், விக்ரமுக்கு அடுத்து ஆர்யா தான் என அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நிச்சயமாக அவரது கடின உழைப்பிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..



Advertisement

Advertisement