• Apr 02 2025

ஹெலிகாப்டரில் வந்திறங்கிய 'குக் வித் கோமாளி 5' பொக்கிஷங்கள்! இந்த காம்போ ஜெயிக்குமா? மரண மாஸ் ப்ரோமோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. இந்த சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் சின்னத்திரை நடிகர்களின் காமெடி கலாட்டாவுக்கு பெரியார்கள் முதல் சிறியோர்கள் வரையில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

இந்நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. ஆனால் அடுத்து ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. 

ஆனால் இம்முறை இந்த நிகழ்ச்சியை தயாரித்த மீடியா மிஷன் நிறுவனம் விலகியது. இதைத்தொடர்ந்து நடுவர் வெங்கடேஷ் பட் விலகினார். அடுத்து தயாரிப்பாளர், இயக்குனர் என அடுத்தடுத்து விலகிப் போனார்கள்.


இதன் காரணமாக குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன் நடக்குமா? இல்லை இந்த நிகழ்ச்சி இத்துடன் நிறைவு பெறுமா என ரசிகர்கள் பெருங்குழப்பத்தில் காணப்பட்டார்கள்.

மேலும், வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக யார் நடுவராக பங்கேற்பார்கள் என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்தது. இதைத் தொடர்ந்து தாமுவுக்கு ஜோடியாக மதம் ரங்கராஜ் இந்த சீசனை தொகுத்து வழங்குவார் என தகவல் வெளியானது.


இந்த நிலையில், தற்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன் பற்றி அட்டகாசமான ப்ரோமோ ஒன்று வெளியாகி  உள்ளது.

அதில் தாமுவும் மதன் ரங்கராஜனும் ஹெலிகாப்டரில் இருந்து மாசாக வந்து இறங்கி வருகிறார்கள். இவர்களது கூட்டணியை பார்த்த ரசிகர்களுக்கு இந்த முறை சீசனின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement