• Jan 19 2025

வீம்புல முடிவு எடுத்த செழியன்.. ஜெனியின் கண்முன்னே அடித்து துரத்திய ஜோசெப்! எழில் சொன்ன அட்வைஸ்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம். 

அதில்,  சமைக்கும் போது ராதிகா கடலை கேட்க பாக்கியா கொடுக்கிறார். அதை நாளைக்கு வாங்கி தருவதாக சொல்ல, பாக்கியா சிரிக்கிறார். வாழ்க்கையே தந்துடன் இது கடலை தானே என நினைச்சா சிரிக்கிறீங்க என ராதிகா கேட்க, நான் இந்த கடலை அளவு கூட யாரையும் பத்தி நினைக்கல என்று சொல்கிறார்.

மறுபக்கம் வீட்டிற்கு கோபமா வந்த கோபி, ஜெனியின் அப்பா பேசிய விடையங்களை  வீட்டில் சொல்லுகிறார். ஜெனிக்கு மாப்பிள்ளை ரெடி எனவும் சொன்னதாக வீட்டில் சொல்ல, எல்லாரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.


இதை அடுத்து ஜெனி வீட்டுக்கு சென்ற செழியன், அங்கு ஜெனியிடம் இங்கு என்ன நடக்குது என கேட்க, ஜெனியின் அப்பா அவரை கதைக்க விடாமல் அடித்து வெளியே துரத்துகிறார்.

இன்னோரு பக்கம், பாக்கியா செழியனை இன்னும் காணல என்று எழிலுக்கு போன் போட்டு போய் பார்க்குமாறு சொல்ல, அங்கு போன எழில், செழியன் காயப்பட்டு இருப்பதை பார்த்து என்ன நடந்தது? நான் போய் கேக்கிறேன் என சொல்ல அவர் தடுக்கிறார். ஆனாலும் ஜெனி அப்படி பண்ண மாட்டாங்க, குழந்தைக்கு பெயர் வைக்கிற விழாவையே தடுத்து நிறுத்தினவங்க என செழியனுக்கு நம்பிக்கை கொடுத்து வீட்டுக்கு அழைத்து செல்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement