• May 18 2024

வாவ்.. இன்னைக்கு வேற லெவல் சம்பவம் இருக்கு போல... 'ஜெயிலர்' படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், விமர்சனம் ரீதியாக படு தோல்வியை சந்தித்தது. இந்த படத்திற்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர்' படத்தை தற்போது  இயக்கி முடித்துள்ளார் .


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், 'ஜெயிலர்' படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, ரோபோ சங்கர், தமன்னா என பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 


அந்தவகையில் வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஷோகேஸ் இன்று மாலை ஆறு மணியளவில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமான அறிவிப்பொன்றை அறிவித்துள்ளது. 


மேலும் ஷோகேஸ் என்று படக்குழு இதில் குறிப்பிட்டுள்ளது ட்ரெய்லரைதான் எனப் பலரும் கூறி வருகின்றனர். ஏனெனில் சமீப காலமாக படங்களின் ட்ரெய்லர்களை வெவ்வேறு பெயர்களில் குறிப்பிட்டுத்தான் படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். உதாரணமாக அட்லீ இயக்கி ஷாருக்கான் நடித்திருக்கும்  ஜவான் திரைப்படத்தின் ட்ரெய்லரை கூட ப்ரிவியூ என்ற பெயரில் தான் வெளியிட்டிருந்தனர். எனவே இன்றைய தினம் 'ஷோகேஸ்' என்ற பெயரில் வெளியாவது ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் தான் எனப் பலரும் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement