• Sep 26 2023

லேட்டா வாழ்த்து சொல்லலாம் அதுக்குனு இவ்வளவு லேட்டாவா சொல்லுவீ்ஙக- மாமன்னன் படத்தை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்

stella / 1 month ago

Advertisement

Listen News!

கதிர், ஆனந்தி, யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் மாரி செல்வராஜ். இவருடைய முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.அதற்கு அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார் 

தாணு தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. இதற்கு அடுத்ததாக மாமன்னன் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக வெளியாகியிருந்த இந்தத்திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது. 


இந்நிலையில் தமிழ் சினிமாவின் தற்போதைய மோஸ்ட் வாண்டட் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "இது தாமதம் என்று எனக்குத் தெரியும். 'மாமன்னன்' சிறப்பான திரைப்படம். அனைவருமே சிறப்பாக பணியாற்றியுள்ளனர். படம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னும் மீள முடியவில்லை. 

உதயநிதி, மாரிசெல்வராஜ், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவுக்கு என்னுடைய வாழ்த்துகள்" என குறிப்பிட்டிருக்கிறார். அவரது ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் லேட்டா வாழ்த்து சொல்லலாம் அதுக்குனு இவ்வளவு லேட்டா என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement