• Jul 15 2026

சட்டசபையில் தரமான சம்பவம் செய்த முதலமைச்சர் விஜய்.. கண்சிமிட்டாமல் பார்த்த ரசிகர்கள்

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

இன்று நடைபெற்ற சட்டசபை அமர்வில் முதலமைச்சர் விஜய் செய்த செயல் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. எதிர்க்கட்சி தரப்பினர் “வாயை திறந்து பேசுங்க சிஎம்” என கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று முதலமைச்சர் விஜய் “பார்ட்டி ஃபண்ட்” என்று குறிப்பிட்டார்.

அதற்கு திமுக தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் எழுந்து நின்று கூச்சலிட்டு, விஜய் பேசுவதை தடை செய்யும் விதமாக வெளிநடப்பும் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பானதால், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. சட்டசபை இப்படித்தான் செயல்பட வேண்டுமா என்ற கேள்வியும் பலரால் எழுப்பப்பட்டு வருகிறது. சிலர், விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்ததால் ஏற்பட்ட தாக்கம் பெரியது எனவும், அவரது வருகை அரசியல் சூழலை மாற்றி வருவதாகவும் கருத்து தெரிவிக்கின்றனர்.

மற்றொரு தரப்பினர், இந்த நேரலை காட்சிகள் ரசிகர்களை அதிகம் ஈர்த்ததால் விஜய் பேசும் பகுதிகளையே அதிகம் பார்க்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் கூறுகின்றனர். இதனால் அவரது புதிய திரைப்படம் குறித்த கவனம் குறைந்து, “ரியல் ஜனநாயகன்” எனும் பிம்பம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

அத்துடன், அவர்கள் இருந்திருதால் ஒரு ஆக்‌ஷன் செய்யலாம் என்று தோன்றியது. அவர்கள் போய்விட்டார்கள். இருந்தாலும் செய்கிறேன் என சொல்லி, 'நீங்கள் எல்லாம் காலி' என்ற ஆக்‌ஷனை செய்தார் விஜய். இந்த ஆக்சன் தான் தற்பொழுது ஹைலைட்டாக பேசப்படுகிறது. 


Advertisement

Advertisement