• Oct 07 2026

எதிர்பார்ப்பு எகிறிய நிலையில் இப்படியொரு வசூலா.? ‘சிக்மா’ 5 நாள் கலெக்‌ஷன் இதோ.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது வசூலில் தடுமாறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்தீப் கிஷன் கதாநாயகனாகவும், ஃபரியா அப்துல்லா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்கியுள்ளார் ஜேசன் சஞ்சய். விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியல் பயணத்தில் கவனம் செலுத்தி வரும் சூழலில், அவரது மகன் சினிமாவுக்குள் இயக்குநராக அறிமுகமானது ‘சிக்மா’ மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.

மேலும், படக்குழு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட புரமோஷன் பணிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இதனால் படம் வெளியான பிறகு நல்ல வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை என்றும், வசூலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘சிக்மா’ திரைப்படத்தின் வசூல் தொடர்பான தகவல்களை Sacnilk இணையதளம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளியான ஐந்தாவது நாளான நேற்று இப்படம் வெறும் ரூ.79 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஐந்து நாட்களில் உலகளவில் இப்படம் சுமார் ரூ.6.98 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆரம்பத்திலேயே வசூல் மந்தமாக இருப்பதால், இனிவரும் நாட்களில் படம் எவ்வாறு செயல்படப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement