• Oct 07 2026

ஒதுக்கப்பட்டேன்.. வாய்ப்புகள் குறைந்தது.. ஆனால் ஒரு விஷயம் என்னை காப்பாற்றியது! - பார்வதி

shali / 1 hour ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் பார்வதி திருவோத். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அவர், தனது துணிச்சலான கருத்துகள் மற்றும் சமூக பார்வைக்காகவும் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறார். இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் திரைத்துறையில் தான் எதிர்கொண்ட அனுபவம் குறித்து பார்வதி பேசியுள்ள கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தனது கருத்துக்களை வெளிப்படையாக பேசிய பிறகு, திரைத்துறையில் தனக்கான வாய்ப்புகள் குறைக்கப்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் முழுமையாக ஒதுக்கப்பட்டதாகவும் பார்வதி தெரிவித்துள்ளார். தான் பேசும் கருத்துகளால் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தன்னை திரையுலகில் இருந்து ஒதுக்க நினைத்த ஒவ்வொரு முறையும் மலையாள ரசிகர்கள் தனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்ததாக பார்வதி கூறியுள்ளார். தனது தனிப்பட்ட கருத்துகளைத் தாண்டி, ரசிகர்கள் தனது நடிப்புத் திறமையை மட்டுமே பார்த்து தொடர்ந்து ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ரசிகர்கள் தன் மீது காட்டிய அன்பு சாதாரணமான ஆதரவு அல்ல என்றும், அது ஒரு புனிதமான பிணைப்பு போன்றது என்றும் பார்வதி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அந்த அன்பும் ஆதரவுமே இன்றளவும் தன்னை திரையுலகில் தொடர்ந்து பயணிக்க வைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பார்வதியின் இந்த வெளிப்படையான பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


Advertisement

Advertisement