அஜித்தின் பில்லா-2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யுத் ஜம்வால்.
மேலும் இதை தொடர்ந்து விஜய்யின் சூப்பர் ஹிட் படமான துப்பாக்கி படத்தில் வில்லன் வேடத்தில் கலக்கி இவர் பிரபலமானார். இதையடுத்து சூர்யாவுடன் இணைந்து அஞ்சான் திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் இவர்.
இவ்வாறு விஜய்,அஜித்,சூர்யா என பல முன்னணி நடிகர்களோடு நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.
தற்போது வித்யுத் ஜம்வால் ஹிந்தி சினிமாவில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். அவருக்கு கடந்த வருடம் நந்திதா மஹ்தானி என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
நந்திதா மஹ்தானி பிரபல பேஷன் டிசைனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விவாகரத்தான அவர் தற்போது வித்யுத் ஜம்வாலை மறுமணம் செய்கிறாராம்.
அத்தோடு வித்யுத் ஜம்வால் மற்றும் நந்திதா திருமணம் இந்த மாதம் லண்டனில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிற செய்திகள்
- பிளாஸ்டிக் சர்ஜரியால் முகம் இப்டி ஆயிருச்சா ? அதுல்யா ரவியின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!
- நடிகை தமன்னா அழகின் ரகசியம் இது தானாம்-அவரே கூறிய மூன்று விசயம்..!
- பொன்னியின் செல்வன் புத்தகத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்ட பாகுபலி பட காட்சிகள்- ஆதாரத்துடன் வெளியான விபரம்..!
- லைகர்” படத்தின் பர்ஸ்ட் சிங்கில் ரிலீஸ்…!
- அந்த வதந்தி உண்மைதான் -உண்மையை உடைத்த ராஷ்மிகா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!